இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் இடையில் தொலைபேசி வழியான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியா – ஈரான் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கத்திய நாடுகளின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியா நடத்திய போராட்டங்களும், அணி சேரா நாடுகளை ஒருங்கிணைப்பதில் எடுத்த முயற்சிகளையும் ஈரான் நினைவு கூறுவதாகவும் பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் போரை நிறுத்துவதற்கு இந்தியா முன்வரவேண்டும் என்றும் ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பலஸ்தீன மக்களின் துன்பங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு எடுக்கப்படும் அனைத்து உலகளாவிய நடவடிக்கைக்கும் ஈரான் ஆதரவளிக்கும் என்றும் ஈரான் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.