தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, சபையில் இல்லாத காரணத்தினால் மக்களுக்கு ஜே.வி.பியின் மீது சந்தேகம் ஏற்பட்டது என ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அநுரகுமார திஸாநாயக்க கோபமடையும் வகையில், நேற்று நான் சபையில் கருத்து வெளியிடவில்லை. ஷம்மி சில்வாவிடமிருந்து ஜே.வி.பிக்கு பணம் வந்ததாகவே கூறியிருந்தேன்.
எனது வழக்கு தொடர்பாக அவர் கூறியிருந்தார். இதுதொடர்பாக நான் கருத்து வெளியிடப்போவதில்லை. ஏனெனில், நான் இதுதொடர்பாக மேன்முறையீடு செய்துள்ளேன்.
88-89 களில் ஜே.வி.பியினர் கப்பம் பெற்றதும், தங்கங்களை கொள்ளையடித்ததும் அனைவருக்கும் தெரியும்.
இவர்களுக்கு வீடுகளுக்கு தீ வைக்கவும், கொலை செய்யவும் முடியுமாக இருக்கும்.
நீங்கள் ஷம்மியிடமிருந்து பணம் பெறவில்லை என்றால் நாம் அதனை ஏற்றுக் கொள்கிறோம்.
நீங்கள் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, சபையில் இல்லாத காரணத்தினால்தான் மக்களுக்கு அந்த சந்தேகம் ஏற்பட்டது.
இதனை தான் ஊடகங்களும் இன்று குறிப்பிட்டுள்ளன” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.