நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்றும் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வட மாகாணத்தின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என்றும் அறவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எள்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.