புதிதாக நியமனம் பெற்ற 2 ஆயிரத்து 519 தாதியர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, 2018ஆம் கல்வியாண்டில் பதிவுசெய்யப்பட்டு 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பயிற்சியை ஆரம்பித்து வெற்றிகரமாக நிறைவுசெய்து, நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.
மேலும், இந்த புதிய ஆட்சேர்ப்புகளுடன் நாட்டின் சுகாதார சேவையில் உள்ள மொத்த தாதியர்களின் எண்ணிக்கை இப்போது 45,000 ஆக அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.