இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போர் குறித்த பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பியுள்ளதாகவும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய நலனுக்காக தெற்குலக நாடுகள் ஒன்றுபட வேண்டிய நேரம் இதுவென என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.