பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து 43 ஆவது நாளாக போர் நடைபெற்று வருகிறது.
காஸாவில் வான் வழி, கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து தற்போது தரை வழித் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் நடத்தி வருகிறது.
இந்நிலையில், காஸாவில் போரினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,000-ஐ கடந்துள்ளது.
ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இதுவரையில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவற்றில் 5000 குழந்தைகள் உள்ளடங்குவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், காஸாவில் 1,800 குழந்தைகள் உட்பட 3,570-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், காஸாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையை மூன்றாவது நாளாக இஸ்ரேல் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.