கிரிக்கெட் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் அது தொடர்பில், சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவிப்பதற்கு கடமைப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைத்த கடிதம் மற்றும் அவர் சபையில் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ரீ லங்கா சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை யில் அரசியல் தலையீடுகள் இருப்பதால் கிரிக்கெட் நிறுவனத்தின் சுதந்திரத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை யின் தலைவரின் கையொப்பத்துடன், குறித்த கடிதம் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.