இந்த வருட இறுதிக்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த மறுசீரமைப்பு நடவடிக்கை நிறைவடைந்ததும் இடைநிறுத்தப்பட்டுள்ள சுமார் 200 வியாபார நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீளும் என்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்தும் நிதியுதவிகள் கிடைக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அடுத்த மார்ச் மாதத்தில் இருந்து அனைத்து துறைகளும் எழுச்சி பெரும் என்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டு வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.