சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்க்கு விதிக்கப்பட்ட தடை குறித்து அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை இன்று தெளிவுபடுத்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
ஐ.சி.சி யின் அரசியலமைப்பின் பிரகாரம் அரசாங்கத்தின் தலையீடு இன்றி கிரிக்கட் சபை சுயாதீனமாக செயற்படுவது அவசியம் என அனைத்து நிறுவன பணிப்பாளர்களின் பங்குபற்றிய கூட்டத்தில் குறித்த சபை தீர்மானம் எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை அவ்வாறானதொரு தடையை கோரியதாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க முன்வைத்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ஐ.சி.சி, குறித்த தடையை விரைவில் நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, ஊடகங்கள் மூலம் பொதுமக்களின் கருத்தை தாக்கி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சபையின் கட்டுப்பாட்டை அமைச்சர் கைப்பற்றியதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.