மோசடி மூலம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட தரமற்ற மருந்துகளால் பாதிக்கப்பட்ட 2000 இற்கும் மேற்பட்ட புற்றுநோயாளர்களின் நிலைமைகள் குறித்து சுகாதார தொழில்வல்லுனர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே சுகாதார தொழில்வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
“இம்யூனோகுளோபுலின் என்று நாங்கள் வழங்கிய மருந்து இம்யூனோகுளோபுலின் மருந்து அல்ல என மருந்தை உற்பத்தி செய்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
கள்ரவர்களை பிடிக்க வேண்டும் என்று கள்வர்கள் பின்னால் ஓடிக்கொண்டுக்கும் போது இந்த மருந்தை எடுத்துக்கொண்ட மக்களின் நிலை குறித்து சிந்திக்க நாங்கள் மறந்து விடுகின்றோம்.
அவர்களின் ஆரோக்கியத்திற்கு பொறுப்பு கூறுவது யார்?
அதேபோன்று ரிடுக்சிமெப் என்ற புற்றுநோய்க்கான மருந்தும் 2000 புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தும் இம்யூனோகுளோபுலின் மருந்தை போன்று பதிவு செய்யப்படாமல் கொண்டு வரப்பட்ட மருந்து என்று உறுதியாகியுள்ளது.
இந்த மருந்தை உற்பத்தி செய்ததாக கூறப்படும்; நிறுவனம் தாங்கள் இவ்வாறான மருந்தை உற்பத்தி செய்வதில்லை என்று கூறியுள்ளது.
ஆகவே இந்த 2000 நோயாளர்களுக்கும் யார் பொறுப்புக் கூறுவது?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.