இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவுள்ளதாக ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே அறிவித்துள்ளார்.
சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து போர் இடம்பெற்று வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கூறியுள்ள இந்தக் கருத்துகள் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
அதன்படி, இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஐந்து நாட்கள் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும் காசா பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக 50 மற்றும் 100 என இரு குழுக்களாக பணயக் கைதிகளை விடுவிப்பார்கள் எனவும், அதில் இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்கியுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதேசேளை, இராணுவ வீரர் எவரையும் விடுவிக்க முடியாது என ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே அறிவித்துள்ளார்.