வெள்ள அனர்த்தத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் முறிகண்டி பிரதேச மக்கள் இன்று(22) சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள பிரதான வாய்க்கால் அடைபட்டுக் காணப்படுவதால், வெள்ள நீர் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றது.
இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையிலேயே , முறிகண்டி வர்த்தகர் சங்கம், கிராம மட்ட அமைப்புக்கள் பொது மக்களுடன் இணைந்து மாபெரும் சிரமதான பணியை இன்று ஆரம்பித்துள்ளனர்.
இதன் போது, பிரதான வாய்க்கால்களில் காணப்பட்ட பற்றைகள், பிளாஸ்ரிக் பொருட்கள் ஆகியன வெளியேற்றப்பட்டன.