டப்ளினில் மூன்று சிறுவர்கள் உட்பட பலரைக் காயப்படுத்திய கத்திக்குத்துத் தாக்குதலுக்குப் பிறகு, ஏற்பட்ட கலவரத்தில் பல வாகனங்கள் தீவைக்கப்பட்டதோடு பல கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி 13:40 க்குப் பிறகு நடந்த தாக்குதலில் ஐந்து வயதுச் சிறுமியும், 30 வயதுடைய ஒரு பெண்ணும் படுகாயமடைந்தனர்.
இது நகர மையத்தில் உள்ள பார்னெல் சதுக்கத்தில் கிழக்கில், சிறுவர்கள் பாடசாலை கொலாயிஸ்டெ முய்ரே கேல்ஸ்கோயிலுக்கு வெளியே இந்த கலவரம் நடந்தது.
இந்த நேரத்தில் வேறு யாரையும் தேடவில்லை என்றும், உறுதியான விசாரணையை பின்பற்றி வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் அயர்லாந்து குடிமகன் என்றும், அவர் 20 ஆண்டுகளாக நாட்டில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வன்முறையின் விளைவாக கடுமையான காயங்கள் எதுவும் இல்லை என்று அயர்லாந்து பொலிஸ் கூறியுள்ளது.