மிகப்பெரிய பனிப்பாறை நகர்ந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்டார்டிகாவின் கடலின் அடிப்பகுதியில் இருந்த இந்த பனிப்பாறை பல தசாப்தங்களுக்கு பிறகு இவ்வாறு நகர ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது பிரிட்டனின் தலைநகரை விட இரண்டு மடங்கு பெரியதாக கருதப்படுகிறது.
இந்த பெரிய பனிப்பாறை 1986 இல் ஃபில்ச்னர்-ரோன் பனிக்கட்டியிலிருந்து உடைந்து அண்டார்டிகாவில் உள்ள வெட்டல் கடலில் புதைந்தது.
பிரித்தானிய அண்டார்டிக் விஞ்ஞானிகளான எல்லா கில்பர்ட் மற்றும் ஆலிவர் மார்ஷ் ஆகியோர், சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, பனிப்பாறையின் இயற்கையான வளர்ச்சி சுழற்சியின் ஒரு பகுதியாக, கடற்பரப்பில் தனது பிடியை இழக்கும் அளவுக்கு பனிப்பாறை உருகி இப்போது நகர்கிறது என்று சுட்டிக்காட்டுகின்றனர்.