விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் முதல் ரெட் கார்ட் கொடுத்த போட்டியாளர்கள் என அனைவரையும் பிரதீப் ரசிகர்கள் இணையத்தில் வறுத்தெடுக்க தொடங்கினர். இந்த நிலையில், தன் மீது பிரதீப் ஆதரவாளர் தாக்குதல் நடத்தியதாக வனிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வனிதா விஜயகுமார், “நேற்றிரவு பிக் பாஸ் 7 தமிழ் ரிவ்யூவை முடித்துவிட்டு, இரவு உணவுக்கு பிறகு என் தங்கை வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எனது காருக்கு அருகில் சென்றேன். லைட் இல்லாமல் இருட்டாக இருந்த அந்த இடத்தில் திடீரென தோன்றிய மர்ம நபர் ஒருவர் “ரெட் கார்ட்” கொடுக்குறீங்களா? அதுக்கு நீ சப்போர்ட் வேற..“என்று கூறியபடி என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடினார் என குற்றம் சாட்டியுள்ளார்.