வடகொரியாவை கவிதையில் புகழ்ந்த 68 வயது முதியவருக்கு, தென்கொரிய நீதிமன்றம் 14 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
லீ யூன்-சியோப் எனும் முதியவர், கடந்த 2016ஆம் ஆண்டு வட கொரிய ஊடகத்தில் வெளியிடப்பட்ட தனது கட்டுரையில், பியோங்யாங்கின் சோசலிச அமைப்பின் கீழ் இரு கொரியாக்களும் ஒன்றிணைந்தால், மக்களுக்கு இலவச வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கல்வி கிடைக்கும் என்று எழுதினார்.
தென் கொரியாவின் தேசிய பாதுகாப்புச் சட்டம் ‘அரசுக்கு எதிரான’ அமைப்புகளின் புகழ்ச்சி மற்றும் ஊக்குவிப்புகளை சட்டவிரோதமாக்குகிறது.
இதனால், வடகொரியாவை பொதுமக்கள் புகழ்வதை தடை செய்யும் சட்டத்தின் கீழ் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வடகொரியாவில் நடந்த கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களில் இக்கவிதையும் ஒன்று.
கடந்த காலங்களில் இதேபோன்ற குற்றத்திற்காக லீ 10 மாதங்கள் சிறையில் இருந்தார் என்று கொரியா ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை, அவர் 2013இல் வட கொரியாவின் இராணுவத்தைப் புகழ்ந்து ஆன்லைனில் கருத்துகளை வெளியிட்டார், அதே நேரத்தில் தென் கொரிய வலைப்பதிவுகள் மற்றும் வலைத்தளங்களில் அடுத்தடுத்த ஆண்டுகளில் அரசுக்கு எதிரான உள்ளடக்கத்தை வெளியிட்டார்.