நியூஸிலாந்தின் புதிய அரசாங்கம், வரிக் குறைப்புகளுக்கு நிதியளிப்பதற்காக, புகைப்பிடிக்கும் தடையை நீக்கத் திட்டமிட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளது.
முந்தைய ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தின் படி, கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த எவருக்கும், அடுத்த ஆண்டு சிகரெட் விற்பனையைத் தடை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்தநிலையில் தற்போது இந்த திடீர் மாற்றத்தை சுகாதார நிபுணர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
‘நாங்கள் திகைக்கிறோம் மற்றும் வெறுப்படைகிறோம்… இது முற்றிலும் சிறந்த சுகாதார நடவடிக்கைகளில் நம்பமுடியாத பிற்போக்கு நடவடிக்கையாகும்’ என்று ஒடாகோ பல்கலைக்கழகத்தின் புகையிலை கட்டுப்பாட்டு ஆராய்ச்சியாளரும் பொது சுகாதார நிபுணருமான பேராசிரியர் ரிச்சர்ட் எட்வர்ட்ஸ் கூறினார்.
கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம், சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. புகையிலை சில்லறை விற்பனையாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல் மற்றும் சிகரெட்டுகளில் நிகோடின் அளவைக் குறைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.
ஸ்மோக் ஃப்ரீ சட்டங்கள், ஒவ்வொரு ஆண்டும் 5,000 உயிர்களைக் காப்பாற்றும் என்று மொடலிங் பரிந்துரைத்தது.
நியூஸிலாந்தின் சட்டங்கள் செப்டம்பர் மாதம் இதேபோன்ற புகைபிடிக்கும் தடையை இளைஞர்களுக்கு அறிவிக்க பிரித்தானிய அரசாங்கத்தை ஊக்கப்படுத்தியதாக நம்பப்படுகிறது.