தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரவித்துள்ளது.
மிக்சாங் என பெயரிடப்பட்டுள்ள புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவக்கப்ட்டுள்ளது.
இந்நிலையில், மிச்சாங் புயல் முன்னறிவிப்பு காரணமாக நாடு முழுவதும் 142 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாளை முதல் வரும் 7ம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் டெல்லி நிஜாமுதீன், விஜயவாடா அதிவிரைவு ரயில், பெங்களூரு ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்பட 142 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.