மத்திய பாரிஸில் கத்தி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
ஈபிள் கோபுரத்திற்கு அருகில் உள்ள குவாய் டி கிரெனெல்லை சுற்றி சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டோர்மானின் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 26 வயதுடைய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியவர் அல்லாஹு அக்பர் என கத்தினார் என்றும், பின்னர் ஆப்கானிஸ்தான் பாலஸ்தீனத்தில் பல முஸ்லிம்கள் இறந்து கொண்டிருப்பதால் தான் வருத்தமடைந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபருக்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.