இலங்கை சினிமா தற்போது பெரும் வளர்ச்சி பாதயை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்திய சினிமாவை ஒத்த அதை விட சிறந்த கதைக்களம் , இயக்கம் நடிப்பு என அனைத்து வகையிலும் சிறந்து விளங்குகின்றது.
அந்தவகையில் , இலங்கை திரைப்பட கலைஞர்களின் பெரும் முயற்சியில் உருவாகியுள்ள நகரலயம் திரைப்படம், கடந்த சனிக்கிழமை திரைக்கு வந்தது.
பிரவீன் க்ரிஷ்ணராஜாவின் எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், சச்சின் செந்தில்குமாரன், வேணுகா இரத்தினம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரவீனின் 2 ஆவது படைப்பில் சச்சினின் உணர்வுபூர்வ நடிப்பில் அனுஷனின் அற்புதமான இசையில் உருவாகிய படமே இந்த நகரலயம்.
ஓர் சமூகத்துக்கு எதிரான அடக்கு முறையினை ஒரு குறும்படமாக படைத்துள்ளார் இயக்குனர் பிரவீன்.
ரகு, அமுதா, சங்கு , முதலாளி மற்றும் அப்பா போன்ற கதாப்பாத்திரங்கள் கதைக் கருவில் உயிரோட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக திரைப்படத்தின் நாயகன் சச்சின் (ரகு) கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக இசையும், தொழில்நுட்பங்கள் மற்றும் காட்சி அமைப்பும் கச்சிதமாக பொருந்தியுள்ளது.
இலங்கை சினிமாவை உலகம் போற்றும் வரை அயராது உழக்கைகும் அனைத்து கலைஞர்களுக்கும் ஆதவனின் வாழ்த்துக்கள்.