டைல்ஸ் மற்றும் சுகாதாரப் பொருட்களின் இறக்குமதியை நீக்கியதால், டைல்ஸ் விலை 50% குறைந்துள்ளதுடன், டைல்ஸ் தேவையும் அதிகரித்துள்ளதாக, `டைல்ஸ் மற்றும் சானிட்டரி பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கத்தினர்` தெரிவிக்கின்றனர்.
அத்துடன் ஜனவரி மாதம் முதல் டைல்ஸ் மீது வரி விதிக்கப்பட்டால், டைல்ஸ்களின் விலை 100% உயரலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமல்லாது இது குறித்து ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன்றையும் டைல்ஸ் மற்றும் சுகாதார பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் இன்று கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரில் ” டைல்ஸ்களின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வரும் இவ்வேளையில் VAT வரியை அமுல்படுத்துவதன் மூலம் டைல்ஸ்களின் விலையை மீண்டும் 100% ஆக அதிகரிக்க முடியும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.