இந்த ஆண்டுக்கான டபிள்யூ.டி.ஏ சிறந்த வீராங்கனை என்ற விருதை உலகின் முதல்நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்விடெக் பெற்றுள்ளார்.
செரீனா வில்லியம்ஸுக்குப் பின்னர் தொடர்ந்து இரண்டு முறை அந்த விருதை பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
2012-15 வரையிலான ஒவ்வொரு சீசனையும் சேர்த்து மொத்தம் ஏழு முறை ஆண்டின் சிறந்த வீராங்கனை என்ற விருதை கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற செரீனா வில்லியம்ஸ் பெற்றிருந்தார்.
இதேநேரம் கடந்த மாதம் கான்கனில் நடந்த டபிள்யூ.டி.ஏ பைனல்ஸ் போட்டியில் எவ்வித தோல்வியையும் சந்திக்காமல் 22 வயதான இகா ஸ்விடெக் சம்பியன் பட்டத்தை வென்றார்.
இதன் மூலம் உலக டென்னிஸ் தரவரிசையில் பெலரஷ்ய வீராங்கனையான அரினா சபலெங்காவை வீழ்த்தி முதலிடத்தை பெற்றிருந்தார்.
இதேவேளை இந்த ஆண்டின் மிகவும் முன்னேறிவரும் வீராங்கனையாக சீனாவின் ஜெங் கின்வென்னும் புதுமுக வீராங்கனையாக ரஷ்யாவைச் சேர்ந்த மிர்ரா ஆண்ட்ரீவாவும் மறுபிரவேச விருது உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவிற்கும் ஆண்டின் சிறந்த பயிற்சியாளரா டோமாஸ் விக்டோரோவ்ஸ்கியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.