போதைப் பொருள் பாவனை தொடர்பில், கடந்த 24 மணித்தியாளங்களுக்குள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 2121 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைதுசெய்யப்பட்டவர்களில் 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் எனவும், 133 பேர் புனர்வாழ்வுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ‘நிஹால் தல்துவ‘ தெரிவித்துள்ளார்.















