வானில் 25 கி.மீ. தூரம் வரை சென்று இலக்குகளை அழிப்பதற்காக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் ஏவுகணை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த இந்த ஏவுகணை அமைப்பு நேற்று விமானப்படை அதிகாரிகளால் சோதித்து பார்க்கப்பட்டது.
இதன் மூலம் ஒரே ஏவுதல் அலகில் இருந்து 4 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த ஏவுகணை அமைப்பை கொண்டிருக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.