பிரீமியர் லீக் போட்டிக்கு முன்னதாக மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பேருந்தின் மீது போதல் கொண்டு தாக்குதல் நடத்திய ரசிகரின் செயலுக்கு லிவர்பூல் கண்டனம் தெரிவித்துள்ளது.
லிவர்பூல் கால்பந்து கிளப் வீரர்கள் மைதானத்திற்கு வந்தபோது மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பேருந்தின் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகிய நிலையில் முழுமையான விசாரணை மற்றும் பொறுப்பானவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என லிவர்பூல் கோரியுள்ளது.
மேலும் இந்தக் கண்டிக்கத்தக்க நடத்தையில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட எவராக இருந்தாலும் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லிவர்பூல் தெரிவித்துள்ளது.