சுதந்திர மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் பதின்மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இருப்பதை கண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஞ்சுவதாக டிலான் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.
ஆகவே அதனை பிளவுபடுத்த ஜனாதிபதி முயற்சிக்கிறார் என அக்கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.
சுதந்திர மக்கள் பேரவையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டாலும், ரணில் – ராஜபக்ச அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட தாம் தயார் என்றும் டிலான் பெரேரா கூறியுள்ளார்.