இந்தியாவிலிருந்து முட்டையை இறக்குமதி செய்வதற்கா வர்த்தக அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முட்டையைக்கூட அரசாங்கத்திற்கு தட்டுப்பாடின்றி வழங்க முடியாமல் உள்ளது.
இந்தியாவிலிருந்து முட்டையை இறக்குமதி செய்வதற்கா வர்த்தக அமைச்சர் ஒருவர் உள்ளார்?
இந்த செயற்பாட்டை மேற்கொள்ள அமைச்சின் செயலாளரே போதும் தானே. எதற்காக அமைச்சர்?
இன்று அனைத்து தொழிலும் வீழ்ச்சியடைந்துவருகின்றன. சிறிய, மத்திய தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆடைத் தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளமையால், சுமார் 6 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.
எந்தவொரு முதலீட்டாளர்களுக்கும் நாட்டுக்குள் வர விருப்பமில்லை. இதனால்தான் நாம் புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என கூறுகிறோம்.
பெரிய வெங்காயம் ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக் காணாத அரசாங்கம் எப்படி ஏனைய பிரச்சினைகளை தீர்க்கப் போகிறது?” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.