கிறிஸ்மஸை முன்னிட்டு மில்லியன் கணக்கான மக்கள் பயணங்களை மேற்கொள்வதால் இன்று பிரித்தானியா முழுவதும் போக்குவரத்து இடையூறு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வார இறுதியில் 21 மில்லியன் பேர் பயணங்களை மேற்கொள்ளவர்கள் என்பதனால் வீதிகளில் கடும் வாகன நெரிசல்கள் ஏற்படலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பல விமான நிலையங்களுக்கு இன்று அதிகளவிலான மக்கள் படையெடுப்பார்கள் என்றும் சனிக்கிழமை பயணிகளின் வருகை அதிகரிக்க கூடும் என ரயில்வே துறையும் அறிவித்துள்ளது.
ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் மற்றும் பியா புயலின் தாக்கம் காரணமாக பல ரயில் சேவைகள் தடைப்பட்டிருந்தன.
வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வெள்ளிக்கிழமை காலை பிரெஞ்சு எல்லை கடவையில் 90 நிமிட தாமதங்கள் ஏற்பட்டதாக டோவர் துறைமுகம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் நாட்டின் சில பகுதிகளில் ரயில் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்ற நிலையில் இன்று முதல் ரயில் சேவைகள் பிஸியாக இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.