அணு ஆயுதங்கள் மற்றும் வழக்கமான ஏவுகணைத் திட்டங்களுக்கு நிதியளிப்பதாக நம்பப்படும் சட்டவிரோத இணைய நடவடிக்கைகளுக்காக வட கொரியாவின் உளவுத் துறை தலைவர் மற்றும் ஏழு வட கொரியர்கள் மீது தென் கொரியா தடைகளை விதித்துள்ளது.
வட கொரியாவின் உளவுத் துறை தலைவர் சட்டவிரோத இணைய நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப திருட்டு மூலம் வெளிநாட்டு நாணயத்தை சம்பாதித்ததாக சியோலின் வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவரது நடவடிக்கைகள் வட கொரிய ஆட்சிக்கு வருவாய் ஈட்டுவதற்கும் அதன் அணுசக்தி மற்றும் ஏவுகணை நடவடிக்கைகளுக்கு நிதி பெறுவதற்கும் பங்களித்தது என்றும் தென் கொரிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
வட கொரியா வெளிநாட்டு விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களை குறிவைத்து, கிரிப்டோகரன்சி சொத்துக்களை பதிவு செய்ய அதிக அதிநவீன நுட்பங்களைப் பயன்படுத்துகிறது என இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருந்தது.
கிம் ஜாங் உன்னின் தலைமையில் பியோங்யாங் அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளுக்காக உலக நாடுகளின் தடைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் தென் கொரியாவும் தடைகளை அறிவித்துள்ளது.