பரடைஸ் திரைப்பட புகழ் லீ சன்-கியூன்(Lee Sun-kyun) உயிரிழந்த நிலையில் தனது காரில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கொரியாவைச் சேர்ந்த அவர் சியோலில் உள்ள பூங்கா ஒன்றில் இருந்தே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
48 வயதான அவர் தனது உயிரை தானே மாய்த்துக் கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளை அந்நாட்டுப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
லீ சன்-கியூன் ஒஸ்கார் விருது பெற்ற பரசைட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.