7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கியுள்ள நிலையில் இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஷிகாவா மாகாணத்தில் உள்ள நோட்டோ பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, அனைத்து மக்களையும் உடனடியாக உயரமான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இஷிகாவாவில் உள்ள வாஜிமா நகரின் கடற்கரையை ஒரு மீட்டருக்கும் அதிகமான அலைகள் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டோக்கியோவைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் சேதம் அல்லது உயிர்சேதம் குறித்து முதலில் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.