நாட்டைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் ஒன்றிணையவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரித திசேரா இணைந்து கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வரப்பிரசாதங்கள், சலுகைகள், தனிப்பட்ட நன்மைகள், அதிகார பதவிகள் மற்றும் அரசியல் பங்குகளின் அடிப்படையிலான அரசியல் ஒப்பந்தங்களில் ஈடுபடுவதை ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் முற்றாக நிராகரித்துள்ளன.
இவ்வாறு சேரும் அனைவரும் நிபந்தனையற்ற உன்னத அறிவொளி அரசியலை நடைமுறைப்படுத்தவே ஒன்றிணைகின்றனர். இந்நாட்டில் நடந்து வந்த வரும் அரசியல் கட்சி தாவல்களை தூக்கி எறிந்து ‘தங்களுக்கு முன் நாடும், தங்களுக்கு முன் மக்களும் என்ற உன்னத கருத்தின் அடிப்படையில் குடும்பவாதமற்ற, மக்கள் வாதத்தைக் கொண்ட அரசியல் கொள்கை ரீதியான பயணத்தை மேற்கொள்வதற்காகவே இந்த கூட்டணி அமைக்கப்படும்
மனிதாபிமான முதலாளித்துவம் நீதி நியாத்தை நிறைவேற்றும் சமூக ஜனநாயகம் எனும் 2 பாதைகளின் ஊடாக ஒரு சீரான நடுநிலையான பாதையில் பயணித்து வருகின்றது.
இது சலுகைகள் வரப்பிரசாதங்களை பெறும் ரம்மியமான பயணம் அல்லாது கடினமான பயணம், சொந்தத்தை விட மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய பயணம்” என அவர் மேலும் தெரிவித்தார்.