நாடளாவிய ரீதியில், எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை விசேட டெங்கு தடுப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர, எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை நாடு முழுவதும் தூய்மை பணிகள் மற்றும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயாளர்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு இனப்பெருக்கம் அதிகமாக காணப்படும் 70 அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் விசேட தடுப்புப் பிரச்சாரம் நடத்தப்படும்.
முப்படையினர், சுகாதார அதிகாரிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர கூறியுள்ளார்.