பிலியந்தலை ஜாலியகொட பிரதேசத்தில் 23 வயதான பிரபல நடிகை ஒருவர் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு தப்பிச் சென்றுள்ளார்.
மொரட்டுவ கட்டுபெத்த பிரதேசத்தில் இருந்து நுகேகொடைக்கு தனது தனிப்பட்ட தேவைக்காக செல்வதற்கு வாடகை வசதிகளை வழங்கும் நிறுவனத்திடம் முச்சக்கரவண்டியை நடிகை ஆர்டர் செய்துள்ளார். அதனை பெறுவதற்காக அங்கு சென்றுகொண்டிருந்த போது ஜாலியகொட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றில் ஏறியுள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகு இயந்திரக் கோளாறை சரிபார்ப்பது போல் முச்சக்கரவண்டியில் இருந்து இறங்கி பின் இருக்கையில் அமர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றுள்ளார்.
அப்போது நடிகை முச்சக்கர வண்டி சாரதியை தள்ளிவிட்டு வாகனத்தில் இருந்து குதித்து சத்தம் போட்டு அப்பகுதி மக்களிடம் கூறியதையடுத்து சாரதி நடிகையை கைவிட்டு ஓடியுள்ளார். சம்பவம் குறித்து பொலிஸ் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
முச்சக்கரவண்டி கொழும்பு – ஹொரணை வீதி வழியாக பொரலஸ்கமுவ நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.