காசாவில் தொடரும் உயிரிழப்புகள் ஏற்க முடியாதவை என நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் இந்தியா அறிவித்துள்ளது.
பாலஸ்தீன காசா பகுதியில் நிலவும் சூழல் குறித்து இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை தெரிவித்து உரையாற்றும் போதே இந்தியாவின் நிரந்தர ஐ.நா. பிரதிநிதி ருசிரா கம்போஜ் இவ்வாறு கூறியுள்ளார்.
காசாவிற்கு இதுவரை இந்தியா 70 டன் அளவிற்கு மருந்துள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் வழங்கி உள்ளது என்றும் 5 மில்லியன் நிதியுதவி டொலர் நிதியுதவி வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேநேரம் ஓக்டோபர் 7 அன்று நடைபெற்ற பயங்கர தாக்குதல்தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்பதை தாம் புரிந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.