சிம்பாவே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்களால் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது,
ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 22.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 96 ஓட்டங்களை குவித்தது.
அவ்வணி சார்பாக ஜாய்லார்ட் கும்பே 29 ஓட்டங்களையும் தகுத்ஸ்வனாஷே கைதானோ 17 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக வனிந்து ஹசரங்க 6 ஓவர்கள் வீசி 19 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதுவே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வனிந்து ஹசரங்கவின் மிகச்சிறந்த பந்துவீச்சு பிரதியாக இது பதிவு செய்யப்பட்டது.,
இதேநேரம் மகேஷ் தீக்ஷன 5 ஓவர்கள் வீசி 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டினையும் ஜனித் லியனகே மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனை அடுத்து27 ஓவர்களில் 97 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 16.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
இலங்கை அணி சார்பாக குஷால் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் மசகட்சா மற்றும் ங்காரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக சிம்பாவே அணியின் 7 விக்கெட்களை வீழ்த்திய வனிந்து ஹசரங்க தெரிவு செய்யப்பட்டார்.