சிம்பாவே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 97 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 22.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 96 ஓட்டங்களை குவித்தது.
அவ்வணி சார்பாக ஜாய்லார்ட் கும்பே 29 ஓட்டங்களையும் தகுத்ஸ்வனாஷே கைதானோ 17 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக வனிந்து ஹசரங்க 5.5 ஓவர்கள் வீசி 19 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதுவே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வனிந்து ஹசரங்கவின் மிகச்சிறந்த பந்துவீச்சு பிரதியாக இது பதிவு செய்யப்பட்டது.,
இதேநேரம் மகேஷ் தீக்ஷன 5 ஓவர்கள் வீசி 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டினையும் ஜனித் லியனகே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதனை அடுத்து 97 ஓட்டங்களை எடுத்தால் என்ற வெற்றி இலக்கோடு இலங்கை அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகின்றது,