யாழ்ப்பாணம் – சட்டநாதர் கோவிலுக்கு அருகில் இருந்து, சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த முதியவரின் சடலம் ஒன்று, நேற்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (வயது 61) என்பவரின் சடலமே அவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சில தினங்களுக்கு முன்னரே உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


















