சிம்பாவே அணிக்கு எதிரான முதலாவது T-20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்களால் வெற்றிபெற்று 1 – 0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றது.
இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருப்பது போட்டி ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில் சிம்பாவே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
சிம்பாவே அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடிய போதும் 5 ஆவது ஒவ்வரின் முதலாவது பந்துவீச்சில் முதலாவது விக்கெட் சாய்க்கப்பட்டது.
சிம்பாவே அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டினாஷே கமுன்ஹுகம்வே 26 ஓட்டங்களோடு மகேஷ் தீக்ஷனாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதே ஓவரின் இறுதி பந்தில் கிரேக் எர்வின் 10 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 2 ஓவர்களை வீசி 5 ஓட்டங்களை கொடுத்து மகேஷ் தீக்ஷன 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
தொடந்து நிதானமாக துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 9 ஆவது ஓவரில் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன் பின்னர் 14 ஆவது ஓவரில் 14 ஓட்டங்களோடு சீன் வில்லியம் ஆட்டமிழந்து வெளியேற சிம்பாவே அணி 83 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதேநேரம் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சிக்கந்தர் ராசா 38 பந்துகளில் 3 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு 6 ஓட்டங்களோடு அரைசதம் அடித்தார். இதன்பின்னர் 62 ஓட்டங்களோடு சமீரவின் பந்துவீச்சில் சானகவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்படி 20 நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சிம்பாவே அணி 5 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களை குவித்தது. பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக தீக்ஷன மற்றும் ஹசார்ங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் சமீரா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்.
இதனை தொடட்ர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் முதலாவது விக்கெட் முதலாவது ஓவரில் வீழ்ந்தது. பத்தும் நிஸ்சங்க 2 ஓட்டங்களோடு ஆட்டமிழக்க தொடர்ந்து 4.2 ஆவது ஓவரில் குஷால் பெரேராவும் 5.2 ஆவது ஓவரில் குஷால் மெண்டிஸ்ஸும் ஆட்டமிழக்க இலங்கை அணி 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
பின்னர் 51 ஓட்டங்களை அணி பெற்றிருந்த போது சதீர சமரவிக்ரம 9 ஓட்டங்களோடும் இதன் பின்னர் 13.4 ஆவது ஓவரில் 16 ஓட்டங்களோடு சரித் அசலாங்கவும் அதே ஓரின் 6 ஆவது பந்துவீச்சில் ஹசார்ங்க எவ்வித ஓட்டங்களையும் பெறாமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இறுதி ஓவரில் இலங்கை அணிக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதன்போது முதலாவது மற்றும் ரியாண்டவது பந்துகளில் தொடர்ந்து 2 நான்கு ஓட்டங்களை ஏஞ்சலோ மத்தியூஸ் பெற்றுக்கொடுக்க அணிக்கு 3 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
இருப்பினும் 4 ஆவது பந்தில் மத்தியூஸ் 46 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை தொடந்துவந்த சமீரா 4 ஓட்டங்களை அடிக்க இலங்கை அணிக்கு இறுதி பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட சமீர2 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு பங்களித்தார்.
மறுமுனையில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய தசுன் சானக 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் சிக்கந்தர் ராசா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.