பௌத்த மதத்தை திரித்து பிரசங்கம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவலோகிதேஸ்வர என்று அழைக்கப்படும் மஹிந்த கொடிதுவக்கு எதிர்வரும் 24 திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஆரம்பத்தில் நாட்டுக்கு வருகை தந்த அவலோகிதேஸ்வர என்ற பெயரில் போதனைகளை வழங்கி வந்த மஹிந்த கொடித்துவக்குவை அவரது பக்தர்களால் வழிபடுவது போன்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாயிருந்தது.
அவர் சொகுசு காரில் களனி ரஜமஹா விகாரைக்கு வந்த விதம் மற்றும் பெண்கள் உள்ளிட்ட குழுவினர் அவரை வழிபடும் விதமும் அதில் அடங்கியிருந்தது.
இந்த நிலையில்;. அவர் மீது உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் உட்பட பல தரப்பினரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில், குறித்த நபர் பன்னிபிட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டது மேலும் இந்த நபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.