மேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 2,482 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி மேல் மாகாணத்தில் பிரதான வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அந்த ஏற்பாடுகளை பயன்படுத்தி மேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த 6 பிரதான திட்டங்களின் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் அம்பத்தளை நீரேற்று நிலையம், மாதிவெல கிழக்கு வளைவு, டொரிங்டன் சுரங்கப்பாதை அபிவிருத்தி உள்ளிட்ட 54 உப திட்டங்கள் கடந்த வருடம் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.