மத்திய மலைநாட்டில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 3 அடி 2 அங்குலம் குறைந்துள்ளதாக நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொடர்ந்து மலையக பகுதிகளில் கடும் வெப்பமான வானிலை தொடரும் பட்சத்தில் காசல்ரீ மேல் கொத்மலை கென்யோன் லக்சபான நவலக்சபான பொல்பிட்டிய கலுகல விமலசுரேந்திர ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாகக் குறைவடைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.