சிம்பாவே அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் 9 விக்கெட்களால் வெற்றிபெற்று இலங்கை அணி T20 தொடரையும் கைப்பற்றியுள்ளது.
ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய சிம்பாவே அணி 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக ஹசார்ங்க 4 விக்கெட்களையும் தீக்ஷண மற்றும் மத்தியூஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
இதனை தொடந்து 83 ஓட்டங்கள் வெற்றி இலக்கோடு இலங்கை அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களின் சிறப்பான துடுப்பாட்டம் மூலம் இலங்கை அணி 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இருப்பினும் 7.4 ஆவது ஓவரில் குஷால் மெண்டிஸ் 33 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடந்து சிறப்பாக விளையாடிய இலங்கை அணி 10.5 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தது. இலங்கை அணி சார்பாக பத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காத்து 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.
இதன் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை இலங்கை அணி 2-1 என கைப்பற்றியது. இதற்கு முன்னர் இடம்பெற்ற ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பறியிருந்தமை குறிப்பிடத்தகத்து.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக வணிந்து ஹசரங்க தெரிவு செய்யப்பட்டார். இதேநேரம் தொடரின் நாயகனாக அஞ்சலோ மத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டார்.