UPDATE :
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஏரியில் படகு கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் வதோதரா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் என மொத்தம் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்களும், 4 ஆசிரியர்களும் இன்று மதியம் அங்குள்ள ஹர்னி ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடந்த போது யாரும் லைப் ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , உயிரிழந்த ஒருவருக்கு 14 லட்சம் இந்திய ரூபாய் இழப்பீடு வழங்க குஜராத் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.