சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கடற்கரை விடுதியொன்றுகடந்த சில தினங்களுக்கு முன்னர் இத்தாலியின் Naples நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியில் சிறுவர்களுக்காக விளையாட்டு மைதானமொன்றை அமைப்பதற்கான கட்டுமானப் பணி முன்னெடுக்கப்பட்டிருந்த போதே நீருக்கு அடியில் குறித்த கடற்கரை விடுதியானது இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறித்த கடற்கரை விடுதியானது 2000 ஆண்டுகள் பழமையான கிளிஃப்டாப் கடற்கரை வீடு(Clifftop beach house) என கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த விடுதியில் 10 பெரிய அறைகள் மற்றும் மொட்டை மாடி ஆகியவை இருந்துள்ளமைக்கான சுவடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதே வேளை குறித்த கடற்கரை விடுதியானது புகழ்பெற்ற எழுத்தாளர், இயற்கை ஆர்வலர் மற்றும் ரோமானிய கடற்படைக் கடற்படையின் தளபதியான பிளினி தி எல்டரின் வசிப்பிடமாக இருந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.