அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் மேற்கொண்ட பயிற்சிகளுக்கு பதிலடியாக நீருக்கு அடியில் இருந்து அணு ஆயுத அமைப்பு சோதனையை நடத்தியதாக வட கொரியா அறிவித்துள்ளது.
நீருக்கடியில் இருந்து அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடிய ஆளில்லா விமானம் கிழக்கு கடற்கரையில் சோதனை செய்யப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சோதனைகள் நடத்தப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் குறித்த அமரிப்பின் திறன் பற்றிய வடகொரியாவின் விளக்கங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என சியோல் கூறியுள்ளது.
அத்தோடு குறித்த செய்திகள் குறித்து எவ்வித கருத்துக்களையும் ஜப்பான் தெரிவிக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைப்பர்சொனிக் வார்ஹெட் பொருத்தப்பட்ட புதிய திட எரிபொருள் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.