40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சமடைந்து அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கையின் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு சர்வதேச கடவுச்சீட்டு சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின்கீழ் இந்த கடவுச்சீட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட அசாதாரண யுத்த சூழ்நிலைகளின்போது தமிழகத்தில் தஞ்சமடைந்த வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் பல்வேறு முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
எனினும், இவர்கள் இலங்கைக்குத் திரும்புவதாயினும் வெளிச்செல்லும் அனுமதி மாத்திரமே வழங்கப்பட்டது.
இந்த விடயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுச் சென்றதை அடுத்து இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு உடன் அமலுக்கு வரும்வகையில் சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.