புத்தளம் – மதுரங்குளி களப்பு பிரதேசத்தில் இருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் அங்கு சென்ற பொலிஸாரும் , புத்தளம் தடவியல் பொலிஸாரும் இணைந்து விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

















