யேமனில் உள்ள எட்டு ஹவுதி இலக்குகளுக்கு எதிராக அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து புதிய தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் இந்த கூட்டு நடவடிக்கையின் போது ஏமனில் உள்ள நிலத்தடி சேமிப்பு தளம் மற்றும் ஹவுதி ஏவுகணை மற்றும் கண்காணிப்பு திறன் ஆகியவை குறிவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஆதரவு ஹவுதிகள், செங்கடல் வர்த்தகப் பாதை வழியாக பயணிக்கும் இஸ்ரேல் மற்றும் மேற்குலகு நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களை குறிவைத்து கடந்த நவம்பர் மாதம் முதல் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
இருப்பினும் செங்கடல் பாதுகாப்பிற்காக அமெரிக்காவும் பிரித்தானியாவும் கடந்த 11 ஆம் திகதி பதிலடி தாக்குதலை தொடங்கியதோடு செங்கடலின் பாதுகாப்பிற்காக கடற்படை பாதுகாப்புப் படையையும் நிறுவியிருந்தன.
இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் இந்த தலையீடு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் பரவுவதற்கு வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினாலும், சுதந்திர வர்த்தகத்தை பாதுகாக்கும் நோக்கில் யேமன் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடதத்க்கது.