போரை முடிவுக்கு கொண்டு வராமல் சிறைபிடிக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்வதற்கான ஒப்பந்தத்தை இஸ்ரேல் முன்வைக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி ஹமாஸ் உள்ளிட்ட குழுக்களால் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட இரண்டு மாத போர்நிறுத்தத்திற்கான முன்மொழிவை இஸ்ரேல் தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
போருக்கு மத்தியில் சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள இஸ்ரேலிய அரசாங்கம் மீது அழுத்தம் அதிகரித்துவரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் கட்டார் மற்றும் எகிப்திய மத்தியஸ்தர்கள் மூலம் இந்த திட்டம் ஹமாஸிடம் முன்வைக்கப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்க இணையத்தளம் தெரிவித்துள்ளதுடன் இரண்டு மாத போர்நிறுத்தமும் இதில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.